தேடல் பற்றி கவிதை
எழுத
ஒரு அமைதியான இடத்தை
அங்கு ஒரு மரத்தை
அருகில் ஒரு நதிகரையை
சில்லென்ற காற்றை தேடினேன்..
இக்காலத்தில்
நம் அருகில்
இவை எங்கு கிடைக்கும்!
இவை எல்லாம் கிடைத்தவுடன்
கண்டிப்பாக தேடலை பற்றி
கவிதை எழுதலாம் என்று நினைத்தேன்..
இவைஎல்லாம் கிடைத்தன,.
எப்படி எழுதலாம்???
என் அறிவை
பிழிந்து எழுதலாம்
என்றால்
என் அறிவையே
தேடவேண்டிற்று!!
ஆகா என் அறிவும்
எனக்கு கிடைத்தது.
(சிரிக்க கூடாது!!)
எந்த தேடலை பற்றி
எழுதுவது?
சாதாரண மனிதர்களுக்கு
வெளிப்புற தேடல்
ஞான பிறவிகளுக்கு
உட்புற தேடல்
என்னை போன்ற
கணிணி படித்த
மேதைகளுக்கு
வேலை தேடுவதே
பெரிய தேடல்!
தேடி பார்!
எனக்கு ஒரு வருட அனுபவம்!!
2 comments:
fantastic finishing... "enakku oru varuda anubavam..." :)
unmai! the starting was somewhat vague! Also I wrote a diff ending first that find a girl in between this is even more tough search but removed it!!
Post a Comment