குழந்தையின் தாய்ப்பால் தேடலோ
தாய் தன் செல்லத்தை தேடுவதிலா!!
பெற்றோரின் நல்ல பள்ளி தேடலோ
பிள்ளைகளின் பாட பிரிவு தேடலோ !!
தந்தைகளின் நல்ல கல்லூரி தேடலோ
இளைஞர்களின் நட்பு தேடலோ !!
படித்து முடிதவர்களின் வேலை தேடலோ
படிக்க வைத்தவர்களின் சிபாரிசு தேடலோ!!
தன் பிள்ளைகளுக்கு வரன் தேடலோ
பிள்ளைகளின் துணை தேடலோ !!
மனிதனின் உட்புற தேடலோ
எல்லாம் கிடைத்தவனின் ஞான தேடலோ!!
கடைசியில் ஆறடி நிலம் தேடலோ
அல்லது வான் நோக்கி வழி தேடலோ!!
No comments:
Post a Comment