Thursday, November 15, 2007

For Ramprasad!!

அடே ராமா அடே ராமா !!!

உன்னுடன் வேலை செய்ததோ சில காலம்
உன்னுடன் பழகியாதோ சில காலம்

நண்பனாய் இருந்ததோ சில காலம்
எதிரிகளாய் இருந்ததோ மிக சில காலம்

ஒன்றாய் பயணம் செய்ததோ சில காலம்
அதில் ஆட்டம் போட்டதோ மிக சில காலம்

அவை சில காலமாய் இருந்தபோதிலும் வருந்தவில்லை
அவைஎல்லாம் இப்போ ஒரு காலமாய் அகிபோனதே!!

அட ராமா அட ராமா !!!

எல்லாம் வியாபாரம்!


இந்த உலகின்
வியாபார தன்மை
என்று
ஒரு
குழந்தை
சக மனிதர்களின்
சிரிப்பை ரசிக்காமல்
செல்பேசியின்
சினுங்களை
பார்த்து சிரிக்கிறதோ
அன்றே
ஆரம்பித்து விடுகிறது!!!

தீபாவளி!

இப்பண்டிகையின்
சிறப்புகளான
புது ஆடை அணிந்து
பட்டாசு வெடித்து
பலகாரம் உண்டு
தொலைக்காட்சிகளில் நடிகைகளின்
பினற்றல் கேட்டு
கொட்டகைகளில் குத்தாட்டம் ரசித்து
நாம் கொண்டாடியதுஎல்லாம்
சிறு பிள்ளைகளில் அனுபவித்ததை
விட்டு
வளரும் சிறிய செல்லங்களுக்கு
கிடைக்க வழி சொல்லும்
தீப ஓளியில்
கொண்டாடுவோம்.

Thursday, November 8, 2007

LIFE!!

Life for certain is enjoying
What they got;
For few its,
What it is "Certain"!

Life for some is
Trying to be different!
For few its
Trying to Make A Difference (MAD)!

தேடல் -தேடலில் தான் எத்தனை வகை!

குழந்தையின் தாய்ப்பால் தேடலோ
தாய் தன் செல்லத்தை தேடுவதிலா!!

பெற்றோரின் நல்ல பள்ளி தேடலோ
பிள்ளைகளின் பாட பிரிவு தேடலோ !!

தந்தைகளின் நல்ல கல்லூரி தேடலோ
இளைஞர்களின் நட்பு தேடலோ !!

படித்து முடிதவர்களின் வேலை தேடலோ
படிக்க வைத்தவர்களின் சிபாரிசு தேடலோ!!

தன் பிள்ளைகளுக்கு வரன் தேடலோ
பிள்ளைகளின் துணை தேடலோ !!

மனிதனின் உட்புற தேடலோ
எல்லாம் கிடைத்தவனின் ஞான தேடலோ!!

கடைசியில் ஆறடி நிலம் தேடலோ
அல்லது வான் நோக்கி வழி தேடலோ!!

Wednesday, November 7, 2007

தேடல்!!

தேடல் பற்றி கவிதை
எழுத
ஒரு அமைதியான இடத்தை
அங்கு ஒரு மரத்தை
அருகில் ஒரு நதிகரையை
சில்லென்ற காற்றை தேடினேன்..
இக்காலத்தில்
நம் அருகில்
இவை எங்கு கிடைக்கும்!
இவை எல்லாம் கிடைத்தவுடன்
கண்டிப்பாக தேடலை பற்றி
கவிதை எழுதலாம் என்று நினைத்தேன்..

இவைஎல்லாம் கிடைத்தன,.
எப்படி எழுதலாம்???
என் அறிவை
பிழிந்து எழுதலாம்
என்றால்
என் அறிவையே
தேடவேண்டிற்று!!

ஆகா என் அறிவும்
எனக்கு கிடைத்தது.
(சிரிக்க கூடாது!!)
எந்த தேடலை பற்றி
எழுதுவது?
சாதாரண மனிதர்களுக்கு
வெளிப்புற தேடல்
ஞான பிறவிகளுக்கு
உட்புற தேடல்
என்னை போன்ற
கணிணி படித்த
மேதைகளுக்கு
வேலை தேடுவதே
பெரிய தேடல்!
தேடி பார்!
எனக்கு ஒரு வருட அனுபவம்!!

விடிவு!!!

கணிணி திரை
முன்பு இரையாகி
இருக்கும்
மனிதர்களின்
நித்திரை
என்று கலையுமோ! !
(இதை நான் எழுதியது
ஒரு விடுமுறை அன்று அலுவலகத்தில்!!)

Note : This is my first writing!!