என்னை நீ ஒருவகையில் சுலபமாக மூத்த பையனாக ஏற்றுகொண்டாய்
மன்னிக்கவும்
நீ எனக்கு அம்மாவாக இருந்தால்
உன்னை தாய் பாசத்தோடு மட்டுமே பார்க்க முடியும்…
நீ எனக்கு அப்பாவாக இருந்தால்
உன்னை ஒரு பயம் கலந்த மரியாதையோடு மட்டுமே பார்க்க முடியும்...
நீ எனக்கு ஆசானாக இருந்தால்
உன்னிடம் பாட அறிவையே எதிர்பார்க்க முடியும்…
நீ எனக்கு நண்பனாக இருந்தால்
உன்னிடம் நட்பை மட்டுமே பகிர முடியும்…
நீ எனக்கு அக்காவாக இருந்தால்
உன்னிடம் சண்டை பிடிப்பதே வேலையாக இருக்கும்…
நீ எனக்கு உறவுமுறையாக இருந்தால்
உன்னிடம் எதிர்பார்ப்பே முதன்மையாக இருக்கும்…
அனால் நீ எனக்கு எல்லாமாக இருக்க வேண்டியதால் தான்
உன்னை ஒரு உறவு முறைக்குள் அடைக்க விரும்பவில்லை…
ஆகையால் எனக்கு நீ நீயாக மட்டுமே போதும்!!!