Sunday, January 20, 2008

அட இவனும் இப்படித்தான்!!

தந்தை சொல்லை கேட்காமல்
உன் சொல்லை கேட்க தவித்தேன்
தாயின் கனவை மறந்து
உன்னை கனவு கண்டேன்
தங்கை பாசம் மறந்து
உன்னிடம் பாசம் கொட்டினேன்
அண்ணன் உழைப்பை மறந்து
உன்னுடன் ஊர் சுற்றினேன் அவன் பைசாவில்
என் வீட்டிற்கு ஒரு வேலை கூட செய்யாமல்
உன் வீட்டு வேலையை அனைத்தும் செய்தேன்
நண்பர்களுடன் ஒரு நிமிடம் கூட பேசாமல்
உன்னுடன் மணி கணக்கில் பேசினேன்
ஆனால் உன் காதலை விரும்பியதற்கு
எனக்கு மிச்சமோ
செல்பேசி பில்லும்
இவனும் இப்படித்தான்
என்ற பட்டமும் தான்!!!